100+ Motivational Quotes In Tamil And Images

Here is the collection of best motivational quotes in tamil with images. This motivational quotes lift your spirits and motivate you to keep going.

தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்.. தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன்..!
செய்யும் செயலை துணிவுடன் செய்... பயந்து கொண்டே ஒரு செயலை செய்யத் தொடங்கினால் அதில் உன்னால் வெற்றியை எதிர்பார்க்க முடியாது...!!
நீ எப்போதும் நீயாகவே இரு ! உனக்கான தனித்துவம் தான் உனது அடையாளம் !!!!!
motivational quotes in tamil images
முன்னேற வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்... தடைகளை எதிர்பார் அதை தாண்டி செல்லவும் உன்னை தயார் படுத்திக்கொள்...!!
தவறுகளை தன் மீது வைத்து கொண்டு மௌனம் காப்பவர்களிடம் பார்த்து பேசு. கோபத்தில் நீ பேசும் வார்த்தைகளை வைத்து இறுதியில் உன்னையே குற்றவாளி ஆக்குவார்கள்.
நம்முடைய நிலையினை மாற்ற நாம்தான் முயற்சிகளை எடுக்க வேண்டும் அடுத்தவர்களை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை!!!
motivational quotes in tamil images
வாழ்வில் ஒவ்வொரு முறையும் உங்களை தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள், ஏனெனில் அவர்கள் தான் உங்களை முளைக்க செய்தவர்கள்.
motivational quotes in tamil images 3
இது உங்கள் சாலை, உங்களுடையது மட்டுமே.. மற்றவர்கள் உங்களுடன் நடக்கலாம், ஆனால் உங்களுக்காக யாராலும் நடகக முடியாது..
motivational quotes in tamil images 4
உன் போட்டியாளர்கள் மீது கவனம் செலுத்த நீ செலவிடும் நேரத்தை விட... உன் முன்னேற்றத்திற்கு அதிக நேரத்தையும் கவனத்தையும் செலுத்து...!!
தோல்வியை ஒப்புக் கொள்ள ஒரு போதும் தயக்கம் காட்டாதே.. உன் தோல்வியில் இருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கின்றது.
தினமும் உனக்கு நீயே ஊக்கம் சொல்லிக் கொள் வேறு யாரையும் எதிர்பார்க்காதே,
நீ நினைத்தால் மட்டுமே உன்னால் ஜெயிக்க முடியும்.
motivational quotes in tamil images 5
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்..!
எல்லோருக்கும் முன்னேற ஒரு காலம் வரும்.. அது சிலருக்கு கஷ்டங்களோடு கலந்து வரும்.. சிலருக்கு கஷ்டங்களை கடந்த பின்னர் வரும்..!! #தன்னம்பிக்கையோடு இரு..
நத்தையையும், ஆமையையும் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் பிறக்கும் போதே, நம் முதுகின் பின் சுமை உண்டு... ஆனால் நாம் நகர்ந்து கொண்டே இருக்கவேண்டும்
motivational quotes in tamil images 6
மனதை அமைதிப்படுத்துங்கள். உற்சாகமாக இருங்கள். எதிலும் சாதித்து காட்ட முடியும். அன்பு கலந்த பொறுமையோடு இருந்தால்...!!
முயற்சியின் பாதைகள் கடினமானவை, ஆனால், முடிவுகள் இனிமையானவை, தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் நனவாகும் வரை.
ஆயிரம் தோல்விகளை ஒரு விஷயத்தில் நீ அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று உன்னிடம் இருக்குமேயானால் உன் போல் வெற்றியாளன் இந்த உலகில் யாரும் இல்லை...
motivational quotes in tamil images 7
உயர்வான எண்ணமும், விரிவான சிந்தனையும், நேர்மையான செயல்பாடும் இருந்தால் உங்களை வீழ்த்த யாராலும் முடியாது.
வாழ்க்கை என்பது ஒரு பள்ளி. முயற்சி தான் அதன் ஆசிரியர். பிரச்சினைகளும், தோல்விகளும் பாடத்திட்டம். முயற்சியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
motivational quotes in tamil images 8
எனக்கு பிரச்சினை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள் பிரச்சனை என்றால் பயமும் கவலையும் வந்து விடும்..!! எனக்கு ஒரு சவால் என்று சொல்லி பாருங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வந்து விடும்...!!
motivational quotes in tamil images 9